மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு
பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்
சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்
விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்
இந்திய அஞ்சல் துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது
வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்
பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட் பேண்ட் இணைய வசதி