Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன்: சல்மான்கானின் திடீர் முடிவு ஏன்?

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (08:27 IST)
வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யும் திட்டம் இல்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் தனது டுவிட்டரில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தூர் நகர மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பங்கஜ் சங்கவி ஆதரவாக சல்மான்கான் பிரசாரம் செய்தார். ஆனால், அவரது பிரச்சாரம் எடுபடவில்லை. அந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த கிருஷ்ணா முராரே மோகே வெற்றிபெற்று மேயரானார். இதனால் சல்மான்கான் அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநில இந்தூர் தொகுதியில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சல்மான் கான் பிரசாரம் செய்வார் என்று மத்தியபிரதேசம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை மறுத்துள்ள நடிகர் சல்மான்கான் இந்த தேர்தலில் நான் எந்த கட்சி சார்பில் போட்டியிடப் போவதில்லை என்றும்,  எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யவும் மாட்டேன் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments