Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் மகன போல ஒருத்தன் இங்கிலிஷ் பேசுவானா? துரைமுருகன் சவால்

Advertiesment
திமுக
, வியாழன், 21 மார்ச் 2019 (19:46 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக மக்களவை தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் திமுக முன்னணி பொறுப்பாளர்களின் வாரிசுகளுக்கு அதிகளவில் இடமளிக்கப்பட்டுள்ளது.
 
அதில், திமுக சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர்வேல் ஆனந்த் முக்கியமானவர். கதிர் ஆனந்த் இனி உங்கள் பிள்ளை, அவரை நான் தொகுதி மக்களுக்காக தத்து கொடுக்கிறேன். இதை வெறும் வார்த்தைகளால் நான் கூறவில்லை, வேண்டுமானால் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் என துரைமுருகன் தனது மகனுக்காக பிரச்சாரம் செய்த போது உருக்கமாகப் பேசினார்.
 
இந்நிலையில் இன்று, என்னுடைய மகனுக்கு அரசியல் தெரியாமல் இல்லை. அவருக்கு நன்றாகவே அரசியல் தெரியும். நாடாளுமன்றத்தில் பேச ஆங்கிலம் முக்கியம். ஆங்கிலம் தெரியாமல் நாடாளுமன்றம் செல்வதால் பயனே இல்லை. அதற்கு வீட்டில் சும்மாவே இருக்கலாம்.
இப்போதெல்லாம் நம் எம்பிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் மகன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். என் மகன் என்பதற்காக சொல்ல வரவில்லை. அவன் நாடாளுமன்றத்தில் மிக சிறப்பாக ஆங்கிலத்தில் பேச போகிறான்.
 
வேண்டும் என்றால் சவால் வைத்துக்கொள்ளலாம். எல்லா வேட்பாளர்களையும் ஆங்கிலத்தில் பேச வைக்கலாம். யார் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார் என்று பார்க்கலாம். என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச அவர்களால் முடியுமா? என பார்ப்போம் என சவால் விடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டுக்குள் 45 விஷ பாம்புகள் : வீட்டுக்காரர் மரண பீதி :வைரலாகும் வீடியோ