அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் உள்பட மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டது.
ஆனால், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. விரைவில் வேட்பாளர்கல் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றார் போல் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் மற்றும் தூத்துகுடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த ஐந்து தொகுதிக்கான வேட்பாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆம், தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசையும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச்.ராஜாவும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் போட்டியிட உள்ளனர்.