Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - டிடிவி. தினகரன்

Advertiesment
ttv dinakaran
, வெள்ளி, 17 மார்ச் 2023 (16:54 IST)
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது, திமுகவினர் பல வாக்குறுதிகள் அளித்து, தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர்.

அதன்படி, திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாக ஒரு கட்டிடம் கட்டித்தரப்படும் என்று திமுக வாக்குறுதியளித்தது.

ஆனால், அந்த வாக்குறுதிகள்  இன்னும் நிறைவேற்றப்படாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் என திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்குடி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள திமுக எம்எல்ஏ தனது வாக்குறுதியில் கூறியபடி,   பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டவும், ஆம்புலன்ஸ், படுக்கை வசதிகள், மருத்துவமனை உபகரணங்கள் கிடைக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடகை பாக்கி தராததால் செல்போன் டவரை எடைக்குப் போட்ட வீட்டு உரிமையாளர்கள்