மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனக்கு யூட்யூபில் மாதம் 3 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்றும் எனக்கு யூடியூப் மூலமாக மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள மக்கள் யூடியூப்-இல் நான் பேசுவதை கவனிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் யூடியூபில் அவருக்கு ஆயிரக்கணக்கான சப்ஸ்கிரைப்ர்கள் உள்ளனர் என்றும் அவர் சுமார் 2500 வீடியோக்களை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் அவர் பேசும் காட்சிகள் மற்றும் அரசியல் விழா, பொது மேடைகளில் பேசுவதை அவர் வீடியோவாக எடுத்து தனது யூடியூப் இல் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஒவ்வொரு வீடியோவுக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.