Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வலிக்கு யூடியூப் பார்த்து சிகிச்சை செய்த இளைஞர் பரிதாப பலி..!

பல்வலிக்கு யூடியூப் பார்த்து சிகிச்சை செய்த இளைஞர் பரிதாப பலி..!
, புதன், 19 ஜூலை 2023 (11:58 IST)
தீராத பல் வலிக்கு யூடியூப் பார்த்து சிகிச்சை செய்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்த்தியுள்ளது. 
 
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞனுக்கு அடிக்கடி பல் வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பல் வலிக்கு என்ன சிகிச்சை என அவர் யூடியூப் பார்த்து  அரளி விதை என்று கூறப்பட்ட பொருளை எடுத்து தனக்கு தானே சிகிச்சை செய்து இருக்கிறார்
 
இந்த நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. பல்வலிக்கு அரளி விதையை யூடியூப் பார்த்து அவர் சிகிச்சை மேற்கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  
 
இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் யூடியூப் பார்த்து யாரும் தங்களுக்கு தாங்களே மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் தகுந்த மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் மேலும் 13 விக்கெட்டுகள் விழப்போகின்றன: பாஜக பிரபலம் பேட்டி..!