பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இன்று மாலை அவர் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
பீகாரில் தற்போது ஜேடியூ கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டணியில் ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் திடீரென கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் இன்று கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருப்பதாகவும் அதன் பின் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் பதவி ஏற்க அனுமதிக்குமாறு கவர்னரிடம் கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பாஜக ஆதரவுடன் ஆட்சியில் இருந்த நிதீஷ்குமார் திடீரென விலகி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்தார் என்பதும் தற்போது மீண்டும் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறா
இது நடந்தால் இந்தியா கூட்டணியில் இருந்து நிதீஷ்குமார் வெளியேறிவிட்டார் என்பது உறுதி செய்யப்படும்.