Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள ஆளுநருக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!

கேரள ஆளுநருக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!

Sinoj

, சனி, 27 ஜனவரி 2024 (18:33 IST)
கேரளம் மாநில ஆளுநர் ஆரிப் கான் இன்று   தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேரளம் ஆளுனருக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இம்மாநிலத்தில் ஆளுநராக ஆரிப் கான் உள்ளார். இந்த நிலையில்,  கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கு கருப்புக் கொடி காட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

அப்போது ஆளுனர் ஆரிப் கான்  திடீரென்று தன் காரில் இருந்து இறங்கி, போராட்டக் காரர்களை நோக்கிச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன்பின்னர், அங்குள்ள தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய ஆளுநர் ஆரிப் கான், போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்வரை இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என்று அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் கேரளம் ஆளுனருக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், ஒன்றரை மணி நேரம் சாலையில் தர்ணா செய்ய ஆளுனருக்கு நேரம் உள்ளது. ஆனால், பேரவையில், அரசின் உரையை படிக்கத்தான் நேரமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளம் மாநிலம்  கொல்லத்தில் ஆளுனர் ஆரிக் கானுக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி முற்றுகையிட்டபோது, காரில் இருந்து திடீரென்று இறங்கி,  அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென சாலையில் சேர் போட்டு அமர்ந்து ஆளுனர் ஆரிப் கான் தர்ணாவில் ஈடுபட்டது குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்..! அமெரிக்காவுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம்..!!