குஜராத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை அம்மாநில மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சமீப நாட்களாக நித்யானந்தா பற்றியும் அவரது ஆசிரமத்தை பற்றியும் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நித்தியானந்தா ஒரு மோசமானவர் என் ஆவரது சீடர்களே கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதிலும், பாலியல் வன்கொடுமை, ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமை படுத்துவது என பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை அம்மாநில அரசு மூடியுள்ளது.
நித்தியானந்த ஆசிரமம் தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக செய்ல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையிலும், அதோடு அவர் மீது தொடர்ந்து எழுந்து வந்த சர்ச்சை புகாரின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கையை குஜராத் மாநில அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.