Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகி பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா!

Advertiesment
யோகி பாபுவுக்கு  நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா!
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:48 IST)
யோகி பாபுவின் "பப்பி" படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கக்கோரி நித்யானந்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் யோகி பாபு தற்போது "பப்பி" படத்தில் நடிவருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

webdunia

 
தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. காரணம் இப்படத்தின் போஸ்டரில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் ஒருபக்கமும் மற்றொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.  அதற்காக பல்வேறு தரப்பில்  இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தற்போது சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் காவல் துறை கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். 
 
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "அமெரிக்காவில் முழு நீல நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவருடன் இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கி வரும் சுவாமி நித்தியானந்தாவை  இணைத்து பப்பி படத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. ஆகவே இந்த சர்ச்சைக்குரிய காட்சியை வெளியிட்டுள்ள படக்குழுவினர் மற்றும் படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உளறிய லொஸ்லியா மாட்டிக்கொண்ட கவின் - வீடியோவை பாருங்கள்!