பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக தமிழகம் உள்ளிட்ட சில தென்மாநிலஙக்ள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான் என்று இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர் என்று தெரிவித்தார்,
மேலும் நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன், நிதி குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள், இதில் பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை என விளக்கினார்.
பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.