அதானி குழுமத்தின் கடன் விவரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றம் இரண்டாம் கட்ட பட்ஜெட் அமர்வுக்காக கூடியது என்பதும் இந்த கூட்டம் தொடங்கியது முதல் எதிர்கட்சி எம்பிக்களின் கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் கடன் விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதானி குழுமத்தின் கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின்படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்று அவர் அதானி கடன் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.