Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழுந்த வேகத்தில் உயரும் அதானி நிறுவனங்களின் பங்குகள்: முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

adani
, புதன், 1 மார்ச் 2023 (15:27 IST)
அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விழுந்த வேகத்தில் தற்போது மீண்டும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிக அதிகமாக உயர்ந்து வருவது  முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
அதானி எண்டர்பிரைசஸ் பங்கு ரூ.155 உயர்ந்து ரூ.1519.50 எனவும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.32 உயர்ந்து ரூ.675 எனவும் இன்று வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை ரூ.22 உயர்ந்து ரூ.701 எனவும், அதானி வில்மர் பங்கு விலை ரூ.18 அதிகரித்து ரூ.379 எனவும் வர்த்தகமாகி வருகிறது.
 
மேலும் அதானி பவர் பங்கு விலை ரூ.7.30 உயர்ந்து ரூ.153.60 எனவும், அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.24.25 உயர்ந்து ரூ.509ஆ எனவும் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு விலை ரூ.8 உயர்ந்து ரூ.600 எனவும், ஏசிசி பங்கு ரூ.18.60 அதிகரித்து ரூ.1750.55 எனவும் வர்த்தகமாகி வருகிறது..
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களின் வயிறு எரிகிறது: கேஸ் விலை உயர்வு குறித்து விஜயகாந்த்