Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூட்கேஸுக்கு வேறு அர்த்தம் உள்ளது – நிர்மலா சீதாராமன் கருத்து !

Advertiesment
மத்திய பட்ஜெட் 2019|பட்ஜெட் 2019|நிர்மலா சீதாராமன்|union budget 2019|Nirmala Sitharaman|Budget 2019-20|budget 2019 date and time
, சனி, 20 ஜூலை 2019 (11:19 IST)
பட்ஜெட்டின் போது சூட்கேஸுக்குப் பதில் சிவப்பு நிறப்பையில் வைத்து பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தது ஏன் என நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.


இந்த ஆண்டுக்கான இந்தியாவின் முழுமையான பட்ஜெட் கடந்த 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை முதன் முதலாக நிதியமைச்சராகப் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை அவர் வழக்கமாக தாக்கல் செய்வது போல சூட்கேஸில் கொண்டுவராமல் சிவப்பு சுருக்குப் பை போன்ற பையில் வைத்துக் கொண்டு வந்தார்.

இது அப்போது பெரிதாக விவாதமாக்கப்பட்டது. இந்நிலையில் அது ஏன் என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது ’ சூட்கேஸ் என்பது ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக்கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில்தான் பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சூட்கேஸ் கொடுப்பது, சூட்கேஸ் வாங்குவது போன்ற லஞ்ச பழக்கவழக்கங்களை அது குறிப்பதாக இப்போது இருக்கிறது. மோடி அவர்களின் அரசாங்கம் சூட்கேஸ் அரசாங்கம் அல்ல. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்: மிருகத்தனமாக நடந்து கொண்ட ஆண்