Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்ஜெட் தாக்கல் இலக்கை அடைய ஒத்துழைப்பு வழங்கவேண்டும்: நிர்மலா கோரிக்கை

பட்ஜெட் தாக்கல் இலக்கை அடைய ஒத்துழைப்பு வழங்கவேண்டும்: நிர்மலா கோரிக்கை
, திங்கள், 8 ஜூலை 2019 (11:04 IST)
மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் உரையாற்ற உள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 5 ஆம் தேதி, மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் அறிக்கையில், இந்தியாவின் நிதி பற்றாக்குறை, உள்நாட்டு உற்பத்தி ஆகியவைப் பற்றிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் வரி விதிப்பு குறித்த பல திட்டங்களும், வளர்ந்த நாட்டிற்கு இணையாக பொருளாதாரத்தை உயர்த்த வகை செய்யும் வகையில் பல அறிவிப்புகளும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

இதனை குறித்து பல அரசியல் கட்சிகள் விமர்சனங்களையும், சில கட்சிகள் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தன. முக்கியமாக திமுக, பாஜக அரசின் இந்த பட்ஜெட், கார்ப்ரேட்டுகளுக்கு துணை போவதாகவும், பெருமுதலாளிகளுக்கு இனிப்பை வழங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல், முழுமையான இலக்கை அடைய, ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில், மத்திய நிதியமைச்சர் உரையாற்ற உள்ளார். மேலும் முக்கியமாக, தேசிய வீட்டு வசதிக்கு பதிலாக, ரிசர்வ் வங்கிக்கே வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுபடுத்தும் அதிகாரம் வழங்கப்படுவது குறித்தும் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலூர் மக்களவைத் தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு !