கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, பாராளுமன்றத்தில் ,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பொதுபட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதில், சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்க்காக பெட்ரொல் டீசல் மீதான சிறப்பு கூடுதல் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மத்திய வருவாய்துறை செயலர் அஜய்பூசன் பாண்டே ஒரு தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில், பெட்ரோ, டீசல் மீதான வரியை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
மேலும், மத்திய பட்ஜெட் அறிவிப்பின் படி பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் வரி 1 லிட்டருக்கு 8 ரூபாய் வரையிலும் டீசலுக்கு ரூ. 2 வரையிலும் உயரவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி லிட்டருக்கு தலா ரூ. 9 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.