Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகரிக்கும் ஒமிக்ரான் - நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!

அதிகரிக்கும் ஒமிக்ரான் - நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (12:38 IST)
ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் என மத்திய அரசு அறிவிப்பு. 

 
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் நூற்றுக்கணக்கில் தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு 9,692 அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்றாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
மேலும் பயணிகள் RT-PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்த RT-PCR பரிசோதனையானது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதோடு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணத்திற்கு முன்னும், பின்னும் சோதனை மேற்கொள்ளவதில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகளுக்கு மானியத்தொகை விடுவிக்க உத்தரவு!