Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மதிய உணவோடு காலை சிற்றுண்டி கொடுக்கவும் வலியுறுத்துகிறது- ஆளுநர் தமிழிசை டுவீட்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மதிய உணவோடு காலை சிற்றுண்டி கொடுக்கவும் வலியுறுத்துகிறது-  ஆளுநர் தமிழிசை டுவீட்
, வியாழன், 15 செப்டம்பர் 2022 (17:53 IST)
புதிய தேசிய கல்விக் கொள்கையில் மதிய உணவோடு காலை சிற்றுண்டி கொடுக்கவும் வலியுறுத்துகிறது என  தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இன்று அரசு தொடக்கப் பள்ளிகளில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் சிற்றுண்டியை உண்டார்.

முதற்கட்டமாக, சென்னையில் 36, திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில் 20, கடலூரில் 15, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 21, வேலூரில் 48, தூத்துக்குடியில் 8, மதுரையில் 26, சேலத்தில் 54, திண்டுக்கலில் 14, திருநெல்வேலியில் 22, ஈரோட்டில் 26, கன்னியாகுமரியில் 19, கோயம்புத்தூரில் 62 பள்ளிகளிளும் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தன் டுவிட்டர் பக்கத்தில்,  2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு  கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை & மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம் எனப் பதிவிட்டுள்ளார்,


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலனுடன் ஜாலி ரைடு.! மனைவியை நடுரோட்டில் அடித்த கணவன்! – வைரலாகும் வீடியோ!