பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடி வெளிநாட்டில் தலைமைறைவாகியுள்ளார். தற்போது இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க முடியாது என்பதால், ஊழியர்கள் வேறு வேலையை தேடிக்கொள்ளுமாறு தெரிவித்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.
தற்போது உள்ள சூழலில் ஊழியர்களின் எதிர்காலத்துக்கு உத்திரவாதம் இல்லை என்பதால், நீரவ் மோடி இவ்வாறு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே, நிரவ் மோடி உறவினர் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 5,000 ஊழியர்களுக்கு பணிநீக்க குறிப்பாணைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.