Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோல்ஸ் ராய்ஸ் உள்பட நீரவ் மோடியின் 9 கார்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

ரோல்ஸ் ராய்ஸ் உள்பட நீரவ் மோடியின் 9 கார்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி
, வியாழன், 22 பிப்ரவரி 2018 (12:33 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி மோசடியாக கடன் பெற்று நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்ட வைரவியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.5000 கோடி மதிப்புள்ள நகைகள் உள்பட சொத்துக்களை ஏற்கனவே சிபிஐ முடக்கியுள்ளது.

இந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான 9 கார்களை இன்று அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இவற்றில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல் 350 சிடிஐ, போர்சே,, பனாமேரா, ஹோண்டா மற்றும் டொயோடா ஃபார்சூனர், டொயோடா இனோவா ஆகிய கார்களும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த 9  கார்களும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும், இன்னும் நீரவ் மோடிக்கும் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலின் அரசியல் பிரவேசம் ; எச்சரிக்கையாக இருங்கள் : எடப்பாடி ரியாக்‌ஷன்?