Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்த இன்னொரு தொழிலதிபர் : என்ன நடக்குது பொதுத்துறை வங்கிகளில்?

ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்த இன்னொரு தொழிலதிபர் : என்ன நடக்குது பொதுத்துறை வங்கிகளில்?
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (11:35 IST)
கிங் ஃபிஷர் அதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி, வைரவியாபாரி நீரவ் மோடி ரூ.11 ஆயிரம் கோடி வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த விவகாரமே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் உள்ளபோது, தற்போது இன்னொரு தொழிலதிபர் சட்டத்திற்கு புறம்பாக ரூ.800 கோடி வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
 
ரோடோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் ஆகிய ஐந்து  பொதுத்துறை வங்கிகளில் 800 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் விக்ரம் கோத்தாரிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு செய்ததாகவும், ரெய்டுக்கு பின்னர் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஆயிரக்கணக்கில் கடன் பெற்ற சிறு வணிகர்களையும் விவசாயிகளையும் மிரட்டி பணத்தை வசூல் செய்யும் வங்கிகள், தொழிலதிபர்களுக்கு கோடி கோடியாய் சட்டவிரோதமாக கடன் கொடுத்து தற்போது நஷ்டத்தை சந்தித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதவனை நான்கு நாட்களாக காணவில்லை ; அது சகஜம்தான் : அதிர்ச்சி கொடுக்கும் தீபா