Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாள பாடகியுடன் ராகுல் காந்தி - வைரல் புகைப்படம்!!

Advertiesment
நேபாள பாடகியுடன் ராகுல் காந்தி - வைரல் புகைப்படம்!!
, வியாழன், 5 மே 2022 (17:56 IST)
ராகுல் காந்தி இருந்த போது இசை நிகழ்ச்சி நடத்தி பாட்டு பாடிய பாடகி சரஸ்வோட்டி பத்ரி என்பவர் ராகுலை புகழ்ந்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 
ராகுல் காந்தியின் நேபாளப் பயணம் இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. பாஜகவும் காங்கிரஸும் பதில் தாக்குதலை தொடுத்தன. சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், நேபாளத்தில் உள்ள ஒரு இரவு விடுதியில் ராகுல் காந்தி பார்ட்டியில் ஈடுபட்டிருந்தார். காங்கிரஸ் தலைவர் தனது நண்பரின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டதை காங்கிரஸ் தெளிவுபடுத்தியது. 
 
நேபாளத்தில் உள்ள ஊடகங்களின்படி, டெல்லியில் CNN-ன் முன்னாள் நிருபராக இருந்த சும்னிமா உதாஸின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி காத்மாண்டு வந்துள்ளார். இவரது தந்தை பீம் உதாஸ் மியான்மருக்கான நேபாள தூதராக இருந்தார். ஆம், ராகுல் காந்தியின் நேபாள பயணம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில், ராகுல் காந்தியின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
webdunia
இரவு விடுதியில் ராகுல் காந்தி இருந்த போது இசை நிகழ்ச்சி நடத்தி பாட்டு பாடிய பாடகி சரஸ்வோட்டி பத்ரி என்பவர் ராகுலை புகழ்ந்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாடகி சரஸ்வோட்டி பத்ரி பதிவிட்டுள்ளதாவது, இசை எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் சக்தி கொண்டது. ராகுல் முன்னிலையில் நான் பாடியதை கவுரவமாக நினைக்கிறேன். ராகுல் மிக எளிமையாக சாதாரணமாக இருந்தது என்னை கவர்ந்தது என்றார்.
 
பாடகி சும்னிமா உதாஸின் திருமணத்தில் கலந்துகொண்டு சில பாடல்களை பாடினார் பாடகி சரஸ்வோட்டி பத்ரி. இந்த ட்வீட்டை காங்கிரஸ் தலைவர்கள் ரீட்வீட் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

600 கிளைகளை மூடுகிறது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!