நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்
நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல் வேதியல் ஆகியவற்றில் 20 கேள்விகள் மட்டுமே எளிதாக இருந்ததாகவும் மற்ற அனைத்து கேள்விகளும் யோசித்து எழுதும் வகையில் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து கூறி வருகின்றனர்
குறிப்பாக இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரியல் மற்றும் தாவரவியல் கேள்விகள் எளிமையாக இருந்ததால் ஓரளவுக்கு சமாளித்து எழுதியதாகவும் இயற்பியல் வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததால் யோசித்து எழுத வேண்டிய நிலை இருந்ததால் அனைத்து கேள்விகளும் எழுதி முடிக்க நேரம் போதவில்லை என்று மாணவர்கள் கருத்து கூறியுள்ளனர்