Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குகிறோம்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குகிறோம்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
, ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (14:17 IST)
நீட் தேர்வு பயத்தால் மாணவர் உயிரிழந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ” நீட் எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்! நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம். நீட்-ஐ இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கொண்டு செல்வோம்” என தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற இளம்புயல் எம்மா ரடுகானு - யார் இவர்?