இன்று தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த மசோதா ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதிமுக கூட்டணி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கண்டிப்பாக இந்த மசோதாவுக்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மாநிலம் மட்டுமே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மசோதாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்
குறைந்தது இரண்டு மாநிலங்கள் இணைந்து ஒரு சட்டத்தை எதிர்த்து மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒரே ஒரு மாநிலம் மட்டுமே சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தால் அந்த மசோதா திருப்பி அனுப்பப்படும் என்று கூறப்பட்டு வருகிறது