அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி சபாநாயகர் இடம் மனு அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி நேற்று இரண்டாக உடைந்ததை அடுத்து அஜித் பவார் தலைமையில் ஒரு அணி ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தது.
இதனை அடுத்து அஜித் பவார் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதும் அவரது ஆதரவாளர்கள் எட்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயந்த் பட்டேல் அவர்கள் கூறிய போது மராட்டிய சட்டசபை சபாநாயகர் இடம் அஜித் பவார் உள்பட 9 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மனு வழங்கியுள்ளோம் என்றும் இந்த மனுவுக்கு சரியான நடவடிக்கையை சபாநாயகர் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சியை விட்டு செல்கிறோம் என்று எந்த ஒரு நபரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் இது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் நாங்கள் கடிதம் எழுதி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.