Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டிலும் ஷிண்டே, அஜித் பவார்கள் உள்ளனர்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!

Advertiesment
தமிழ்நாட்டிலும் ஷிண்டே, அஜித் பவார்கள் உள்ளனர்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!
, திங்கள், 3 ஜூலை 2023 (08:16 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே, சிவசேனா கட்சியை உடைத்து பாஜக ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் இருக்கும் நிலையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜித் பவார் என்பவரும் ஆளுங்கட்சியில் இணைந்துள்ளார். அவர் நேற்று துணை முதலமைச்சராக பதவி ஏற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் பாஜகவின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்த நிலையில் இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் இருந்தது போலவே தமிழ்நாட்டிலும் ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என்றும் அதனால் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உதறல் எடுத்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அவர் யாரை மனதில் வைத்து ஷிண்டே மற்றும் அஜித் பவார்கள் உள்ளனர் என்று கூறினார் என்பது குறித்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்: கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!