ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே என்ற ஒரு முதலமைச்சரும் தேவேந்திர பட்நாவிஸ் என்ற துணை முதலமைச்சரும் இருந்த நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் மேலும் ஒரு துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றுக்கொண்டார்.
நேற்றுவரை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித் பவார் இன்று தனது ஆதரவாளர்கள் எம்எல்ஏக்களுடன் கவர்னரை சந்தித்து அரசியல் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரு முதலமைச்சர் இரண்டு துணை முதல் அமைச்சர் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறிய விளக்கம் பின்வருமாறு:
தற்போது மகாராஷ்டிராவில் ஒரு முதலமைச்சரும் 2 துணை முதலமைச்சர்களும் உள்ளோம். இரண்டு இயந்திரங்களை கொண்டு இயங்கிய அரசு, தற்போது 3 இயந்திரங்களை கொண்டுள்ளது. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக, அஜித் பவாரையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறேன். அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிராவை வலுப்படுத்தும்"என்று கூறியுள்ளார்.