Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் ஆபாச பொம்மைகள், பொருட்கள் விற்பனை – ரெய்டில் ஷாக் ஆன போலீஸ்?

மும்பையில் ஆபாச பொம்மைகள், பொருட்கள் விற்பனை – ரெய்டில் ஷாக் ஆன போலீஸ்?
, திங்கள், 1 ஜூலை 2019 (16:24 IST)
மும்பையில் 20 வருடங்களுக்கும் மேலாக அனுமதியில்லாமல் ஆபாச பொம்மைகளையும், கருவிகளையும் மறைமுகமாக விற்பனை செய்த கடைகளை போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

மும்பையில் தனிமையில் இன்பம் தரக்கூடிய பொருட்கள் பல வருடங்களாக விற்கப்பட்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸாருக்கு இது குறித்து எதுவும் தெரியாமல் போனது ஆச்சர்யமான விஷயம்தான். இதுபற்றிய ஒரு கட்டுரையை அங்கே உள்ள ஒரு பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய போலீஸார், எங்கெங்கு இதுபோன்ற பொருட்களை விற்கிறார்கள் என முதலில் விசாரித்து கடைகளின் பட்டியலை தயாரித்தனர்.

ஒரே நாளில் அனைத்து கடைகளிலும் ரெய்டு நடத்திய போலீஸார் அங்கு காட்சிக்கு வைத்திருந்த பல ஆபாச பொருட்களை கைப்பற்றினர். கடை உரிமையாளர்களையும் கைது செய்தனர். இத்தனை வகையான பொருட்களா என அதிர்ச்சியடைந்த அவர்களை மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த பொருட்களில் பெரும்பாலானவை பெண்கள் உபயோகிப்பது என்றும், கடையின் வாடிக்கையாளர்கள் பெண்கள்தான் அதிகம் என்ற தகவல்தான் அது.

மொத்தமாக 50000 ரூபாய் மதிப்புள்ள பல பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளரையும் கைது செய்தனர் போலீஸ். அவர்கள் மேல் பிரிவு 292 (தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் மற்றும் பொருட்களை விற்பது) என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இது போன்ற ஆபாச பொருட்களுக்கு இந்தியாவில் எந்த விதமான அனுமதியும் வழங்கப்படாத அதே நேரத்தில் தடை செய்யப்பட்டு எந்த உத்தரவும் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ஒருவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் சபரி மலைக்குச் சென்றே தீர்வேன்: கேரளாவைச் சேர்ந்த பெண் சர்ச்சை பேச்சு