Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி கடனை வசூலிக்க வங்கிகள் ரௌடியை அனுப்பினால் என்ன நடக்கும் தெரியுமா?

இனி கடனை வசூலிக்க வங்கிகள் ரௌடியை அனுப்பினால் என்ன நடக்கும் தெரியுமா?
, திங்கள், 1 ஜூலை 2019 (15:33 IST)
வங்கிகளில் சாதாரண மக்கள் பலவிதமான தேவைகளுக்காக கடன் பெறுகிறார்கள். அதை திரும்ப கட்டுவதில் சில சமயம் காலத்தாமதம் ஏற்படும். சிலரால் கட்டவே முடியாத நிலையும் இருக்கும். வங்கிகள் வர்களிடம் பணத்தை வசூலிக்க ரௌடிகளை வாடிக்கையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரௌடிகள் காலை, இரவு என நேரம் பார்க்காமல் வீட்டிற்கு வருவதும் கடன் வாங்கியவர்களை மிரட்டுவதுமாக இருக்கிறார்கள். பலரை ரோட்டில் வைத்து அசிங்கப்படுத்தவும் செய்கிறார்கள். இதனால் மனமுடைந்து பலர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உண்டு.

இதுகுறித்து மக்களவையில் நேற்று பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் “வங்கிகள் ரௌடிகளை வைத்து சாதாரண மக்களை மிரட்டுவது மோசமான செயலாகும். கடன் பெற்றவர்களை ரௌடிகள் மூலம் மிரட்டி பணம் வசூலிக்க எந்த வங்கிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள விதிகளின்படி, கடன் பெற்றோர் கடனை செலுத்தாத பட்சத்தில் தனியார் கடன்மீட்பு நிறுவனங்கள் மூலமாகவோ, போலீஸார் மூலமாகவோ அவர்களிடம் முறைப்படி பேசி பணத்தை பெற வேண்டும். தவிர, இதுபோன்ற தவறான முறையில் பணம் வசூலித்தால் அந்த ரௌடிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது மட்டுமின்றி, வங்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் இந்த வில்சன்? ஸ்டாலின் எம்பி பதவி வழங்கியது ஏன்?