Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனது பேச்சுக்கு மதிப்பில்லை: சித்தராமையா குற்றச்சாட்டு

எனது பேச்சுக்கு மதிப்பில்லை: சித்தராமையா குற்றச்சாட்டு
, திங்கள், 1 ஜூலை 2019 (10:58 IST)
கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் தனது பேச்சுக்கு மதிப்பில்லை என்று கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கர்நாடாகாவில் கங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகள் படுதோல்வி அடைந்ததால், கூட்டணி கட்சித் தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, கூட்டணி அரசின் மீது முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தனது அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். நேற்று கர்நாடகாவின் விஜயாபுரா மாவட்டத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், “ கூட்டணி ஆட்சியில் எல்லாமே சரியாக நடக்கிறது என்று சொல்ல முடியாது. ஒரு சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. மக்களும் பல பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறார்கள்’ என்று சித்தராமையா கூறினார்.

மேலும் அவர், ”தற்போது மக்கள் பிரச்சனையில் முடிவு எடுக்கவோ, அதனை தீர்க்கவோ நான் முதலமைச்சர் அல்ல, வெறும் கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்புத் தலைவர் மட்டுமே, அதனால் நான் சொல்வதை யாரும் கேக்கமாட்டார்கள். என்னுடைய பேச்சுக்கெல்லாம் அங்கு மதிப்பில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு கூட்டணி ஆட்சியில் தனது பேச்சுக்கு மதிப்பில்லை என்று சித்தராமையா கூறி இருப்பது கூட்டணி அரசில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் தான் முதலமைச்சராக இருந்த போது புதிதாக சில தாலுகாக்கள் உருவாக்கப்பட்டது என்றும், அவ்வாறு உருவாக்கப்பட்ட தாலுகாக்களுக்கு தற்போது வரை அலுவலக ஊழியர்களை நியமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கராத்தே தியாகராஜன் மன்னிப்புக் கேட்க வேண்டும் – ப சிதம்பரம் பல்டி !