மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஊழியர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையில் யுரான் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. வழக்கம்போல ஊழியர்கள் தங்கள் பணிகளில் ஈடுப்பட்டிருந்தபோது, திடீரென ஒரு பகுதி தீப்பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக தீ விபத்து பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். அந்த போராட்டத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஆலையில் தீப்பற்றிய சமயம் அங்கே சிக்கிக்கொண்ட 5 ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர்.
ஆலையை சுற்றி பொதுமக்கள் செல்லாதவாறு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இதனால் எண்ணெய் சுத்திகரிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.