கிரிக்கெட் வீரரை அடித்து கொன்ற மர்ம கும்பல் – மும்பையில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (19:20 IST)
மும்பையில் 35 வயது கிரிக்கெட் வீரர் ராகேஷ் பவாரை மர்ம கும்பல் ஒன்று அடித்து கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர். ராகேஷ் பவார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மும்பை பகுதியில் பிரபல கிரிக்கெட் ப்ளேயராக அறியப்படும் இவர் அங்குள்ள குழந்தைகளுக்கு கிரிக்கெட் கற்றுதரும் பயிற்சி மையமும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் அவருடைய தோழி ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார் ராகேஷ். அப்போது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவர்கள் வாகனத்தை வழிமறித்தது. இதை சற்றும் எதிர்பாராத ராகேஷை அவர்கள் சிறிய ரக கோடாரியாலும், இரும்பு கம்பிகளாலும் சராமாரியாக தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த ராகேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரது தோழி போலீஸாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் வந்த வேலையை முடித்துவிட்டு மூவர் கும்பல் தப்பியோடிவிட்டது. ராகேஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். மேலும் இது ஏதாவது பழிவாங்கல் முயற்சியா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments