Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

Advertiesment
மும்பை

Mahendran

, வெள்ளி, 6 ஜூன் 2025 (15:07 IST)
ஆட்டோ டிரைவர் ஒருவர், ஆட்டோ ஓட்டாமல், ஆட்டோவை நிறுத்தி வைத்துக்கொண்டே மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவை அமெரிக்க தூதரகம் முன் தினசரி நிறுத்தி விடுவார். அங்கு உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், விசா விண்ணப்பிக்க வரும் நபர்களிடம் உள்ள பைகளை உள்ளே கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.
 
அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களிடம் அந்த ஆட்டோ டிரைவர் அணுகி, "பையை என்னிடம் தாருங்கள்; நீங்கள் உள்ளே சென்று வரும் வரை பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் அதற்கு 1000 ரூபாய் கட்டணம்," என்கிறார். வேறு வழி இல்லை என்று பைகளை வைத்திருப்பவர்கள், அவரிடம் கொடுத்து விட்டு செல்கின்றனர்.
 
இதுபோல் தினமும் அவர் 20 முதல் 30 நபர்களிடம் பைகளை வாங்கி, தனது ஆட்டோவில் வைத்து பாதுகாக்கிறார் என்றும், இதன் மூலம் அவருக்கு மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வருமானம் வருவதாகவும், சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
 
இன்னும் அதிகமாக பைகள் வந்தால், ஒரு போலீஸ் அதிகாரி வைத்திருக்கும் லாக்கரை அவர் பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஒரு ஆட்டோவை வைத்துக்கொண்டு, அதை பெட்ரோல் போட்டு ஓட்டாமல், மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்ற தகவல், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!