Publish Date: Mon, 02 Jun 2025 (15:20 IST)
Updated Date: Mon, 02 Jun 2025 (15:27 IST)
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. போட்டி நடைபெற்ற அகமதாபாத்தில் மழை பெய்ததால் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதையடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியாக விளையாடினாலும் அவ்வப்போது விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார். அவர் 41 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டி முடிந்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். அப்போது அவரிடம் கைகுலுக்க வந்த ஷஷாங்க் சிங்கிடம் ஆக்ரோஷமாகப் பேசினார். அவரிடம் என் முன்னால் வராதே என்று சொல்வது போல சைகை செய்தார், இது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் எப்போதும் ஆக்ரோஷமானவர் என்பதால் இதுபோல அவர் அடிக்கடி நடந்துகொள்வது வாடிக்கைதான். ஷஷாங் சிங் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனதால் இப்படி திட்டி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.