மத்திய அரசின் NCERT பாடப்புத்தகங்களில் முன்னதாக இஸ்லாமிய மன்னர்கள் வரலாறு பகுதிகள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வடமாநிலங்களில் இஸ்லாமிய மன்னர்கள் மீதான வெறுப்பு தொடர்ந்து வரும் நிலையில் அது அன்றாட வாழ்க்கையிலும் எதிரொலித்து வருகிறது. சமீபத்தில் இந்தி படம் ஒன்றை பார்த்துவிட்டு அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என பலர் கொதித்தெழுந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசின் NCERT பள்ளிகளில் 7ம் வகுப்பின் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாறு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மகத பேரரசு, மௌரியர்கள், சுங்கர்கள் உள்ளிட்ட பண்டைய இந்திய அரச வம்சங்கள் குறித்த பாடங்கள் இடம்பெற்றுளன.
மேலும் ஒரு அத்தியாயத்தில் உலகளாவிய புனித இடங்கள் குறித்த பாடமும், அதில் 12 ஜோதிர் லிங்கங்கள், சார்தாம் யாத்திரை, சக்தீபீடங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளது. முன்னதாக இஸ்லாமிய அரசு குறித்த வரலாற்று பாடத்தை குறைத்த NCERT, தற்போது மொத்தமாக அந்த வரலாற்றை நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K