பிரியரங்கா போட்டியால் தொகுதி மாறுகிறாரா மோடி? அமித்ஷா விளக்கம்

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (07:07 IST)
பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டாலும் அவரை எதிர்கொள்ள மோடி தயாராக இருப்பதாகவும், தொகுதி மாறவோ அல்லது இரண்டாவது தொகுதியில் நிற்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா நிறுத்தப்படலாம் என்பதால் பிரதமர் மோடி வேறு தொகுதிக்கு மாற வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது அவர் இன்னும் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாகவும் வெளிவந்த செய்தி குறித்து விளக்கம் அளித்த அமித்ஷா, 'வாரணாசி தொகுதியில் ஏப்ரல் 26ம் தேதி பிற்பகல் பிரதமர் மோடி தமது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அப்போது அவருடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடன் இருப்பார்கள். பிரியங்கா காந்தி போட்டியிட்டாலும், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு அவரை எதிர்கொள்வார்' என்றும் அமித்ஷா கூறினார்.
 
மேலும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என தன்மீது ராகுல்காந்தி கூறிய விமர்சனத்திற்கு பதிலளித்த அமித் ஷா, 'இது ஜோடிக்கப்பட்ட அரசியல் வழக்கு என்றும், நீதிமன்றம் தமக்கு சாதகமாக தீர்ப்பு அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments