Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி அப்படி சொல்லவில்லை - சத்திய நாராயணன் விளக்கம்

Advertiesment
BJP election manifesto
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (14:33 IST)
சமீபத்தில் தர்பார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான அன்று செய்துயாளர்களைச் சந்தித்த ரஜினி, மோடி மறுபடி ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்பை செயல்படுத்துவார். பாஜக தேர்தல் அறிக்கையை பாராட்டும் விதத்தில் அவரது சொந்த அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்.
இதனையடுத்து பல ஊடகங்கள், பத்திரிக்கைகள் ரஜினி பிஜேபிக்கு ஆதரவாளர் என்றும், அவர் தனது கருத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு கூறினார் என்று பல்வேறு விமர்சங்கள் எழுந்தன.
 
ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல்  தர்பார் படத்தின் ஹூட்டிங்கில் பங்கேற்ற சென்றவர், மறுபடி ஓட்டு போடும் நாளில் சென்னைக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
 
இந்நிலையில் திருப்பூர் ஆண்டிபாளையத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவிலுக்கு, ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் வருகை தந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி களமிறங்குவார். வரும் மே 23 ஆம் தேதிக்குப்பிறகு ரஜினியின் அரசியல் நிலைமை என்னவென்று தெரியும். மேலும், பிரதமர் மோடியின் ஆட்சியில் உள்ள திட்டங்களைத்தான் ரஜினி பாராட்டினார். ஆனால் அவருக்கு ஓட்டு போட  சொல்லவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னமராவதியில் 144 வாபஸ் – இயல்புநிலைக்கு திரும்பிய புதுக்கோட்டை !