Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஜராத் மக்களவைத் தேர்தல் – மோடி, அமித் ஷா வாக்களித்தனர் !

குஜராத் மக்களவைத் தேர்தல் – மோடி, அமித் ஷா வாக்களித்தனர் !
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (10:23 IST)
குஜராத் மக்களவைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் வாக்களித்தனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று மூன்றாவது கட்ட தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. பல மாநிலங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கம் ஒரேக் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் தங்கள் வாக்குகள் உள்ள மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் வாக்களிப்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகை புரிந்தனர்.
webdunia

அதன் பின்னர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும், ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தனர். பின்னர் இருவரும் தங்கள் வாக்கைப்பதிவு செய்து தங்கள் கடமையை ஆற்றினர். செய்தியாளர்களிடம் பேசிய மோடி ‘ஈஇடி வெடிமருந்தை விட வாக்காளர் அடையாள அட்டை வலிமையானது. அதனால் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களியுங்கள். சொந்த மாநிலத்தில் வாக்களித்தது கும்பமேளாவில் புனித நீராடியதை விட அதிக சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது’ எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கை'க்கு ஓட்டு போட்டால் 'தாமரை'க்கு போகிறது: கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு