”தமிழ் மொழி அழகு நிறைந்தது”.. தமிழர்களை நெகிழவைக்கும் மோடி

Arun Prasath
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (10:49 IST)
தமிழ் மொழி மிகவும் அழகு நிறைந்தது என பிரதமர் மோடி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பிரதமர் மோடி சமீப நாட்களாகவே எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழில் சில பழமொழிகள் மேற்கோள்காட்டி பேசி வருகிறார். சீன அதிபரை சந்தித்த நிகழ்வு கூட தமிழகத்தின் மாமல்லபுரத்தையே தேர்ந்தெடுத்தார்.

இதை தொடர்ந்து மாமல்லபுரத்தை வர்ணித்து, பிரதமர் மோடி ஒரு கவிதையையும் எழுதியுள்ளார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் நடிக விவேக் ஆகியோர் பிரதமரின் தமிழ்பற்றை குறித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “தமிழ் மிகவும் அழகான மொழி, தமிழர்கள் தனித்துவமானவர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாமல்லபுர கடற்கரையின் எழிலும், அழகும் எனது எண்ணங்களை வெளிக்கொணர உரிய தருணத்தை உருவாக்கி தந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மோடியின் திடீர் தமிழ் பாசம், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கான ஒரு அரசியல் முயற்சி எனவும் பலர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments