பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக குறைக்கப்படும் என அறிவித்தார். இந்த முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த திட்டத்தை கைவிட கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் வேலைநிறுத்தம் செய்வதாக நோட்டீஸ் வெளியிட்டனர்.
மேலும் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்தும் எந்த தீர்வும் எடுக்கப்பட்டவில்லை. ஆதலால், இன்று காலை 6 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, காலை 10 மணிக்கு வங்கி ஊழியர்கள் பேரணி நடைபெறவிருக்கிறது. இதே போல் நாடு முழுவதும் வங்கி உழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி அதிகாரிகளும், தனியார் வங்கி ஊழியர்களும் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.