”நோ வைக்கோல், ஒன்லி சிக்கன்”..அடம்பிடிக்கும் பசு மாடுகள்

Arun Prasath
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (10:08 IST)
கோவாவில் சாலைகளில் சுற்றித்திரியும் பசு மாடுகள் சிக்கன், மட்டன் மட்டுமே சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

கோவா மாநிலத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் பசு மாடுகளை அம்மாநில அரசு கோசாலைகள் அமைத்து பராமரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாடுகள் வழக்கமாக சாப்பிடும் வைக்கோல் போன்ற உணவுகளை சாப்பிடுவதில்லை எனவும், சிக்கன், மட்டன், மீன் வருவல் ஆகியவை மட்டுமே சாப்பிடுகிறது எனவும் புகார் எழுந்துள்ளது.

இது அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து அம்மாநில கழிவு மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ, பசு மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்த போது, ஹோட்டலில் இருந்து கொட்டப்படும் குப்பைகளில் உள்ள சிக்கன், மட்டன், மீன் வறுவல் ஆகிய உணவுகளை தின்று பழகி இருப்பதே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

ஆனால் இதனை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அதாவது, பசு மாடுகள் தாவரபட்சிகள், அவைகள் மாமிசங்களை சாப்பிடுவதை நம்பமுடியவில்லை, அப்படியே அது மாமிச உணவுகளை சாப்பிட்டாலும், வைக்கோல், பில் ஆகியவற்றை கொடுத்தால் அதனை தான் விரும்பி சாப்பிடும்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய போரை ஊக்குவிப்பதே இந்தியாதான்.. புதின் நட்பில் எந்த பயனும் இல்லை! - ட்ரம்ப் ஆதங்கம்!

தவெக தலைவர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்.. சென்னை ஐகோர்ட்டில் விசாரணை..!

சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஜிஎஸ்டி போடும் ஹோட்டல்கள்! குறைக்காதது ஏன்? - ஓட்டல் உரிமையாளர்கள் விளக்கம்!

அரசு பேருந்துகளில் இனி வாட்டர் பாட்டில் கிடைக்கும்.. போக்குவரத்துக் கழகம் புதிய முயற்சி..!

இந்தோனேசியாவில் உயிரிழந்த ஆஸ்திரேலியரின் உடலில் இதயத்தை காணவில்லை.. திருடப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments