Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேள்வி கேட்ட பெண் ; அமித்ஷாவைக் காட்டிய மோடி – இதுக்கு பேர்தான் பிரஸ்மீட்டா ?

கேள்வி கேட்ட பெண் ; அமித்ஷாவைக் காட்டிய மோடி – இதுக்கு பேர்தான் பிரஸ்மீட்டா ?
, சனி, 18 மே 2019 (11:09 IST)
நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடி பெரும்பாலானக் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அமித் ஷா பக்கம் கைகாட்டி நழுவிச் சென்றார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிப்வு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 21 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிகிறது.

இதையடுத்து பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி ‘தேர்தல் பரப்புரை மேற்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இனி கொஞ்சம் நாட்கள் இளைப்பாறுவேன். தேர்தலை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி. மக்கள் பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுக்க உறுதியாக உள்ளனர். நாட்டின் நிர்வாக முறைகளில் நாங்கள் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறோம். மீண்டும் வெற்றி பெற்று நாட்டை நாங்களே ஆளுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின் பத்திரிக்கையாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் மோடி பதில் அளிக்காமல் அமித் ஷா பக்கம் கைகாட்டினார். பெரும்பாலான கேள்விகளுக்கு அமித்ஷாவே பதில் அளித்தார். இதனால் இது மோடியின் பிரஸ்மீட்டா அல்லது அமித்ஷாவின் பிரஸ்மீட்டா என சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாய்லெட் கவர், டோர் மேட்டில் பிள்ளையார் படம்: சர்ச்சையில் அமேசான்