Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்க்கட்சியாக காங்கிரஸ் சிறப்பாக செயலபட்டுள்ளது – ராகுல் காந்தி நிறைவு உரை !

Advertiesment
எதிர்க்கட்சியாக காங்கிரஸ் சிறப்பாக செயலபட்டுள்ளது – ராகுல் காந்தி நிறைவு உரை !
, வெள்ளி, 17 மே 2019 (19:17 IST)
இன்றோடு மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைவதை அடுத்து ராகுல் காந்தி தனது நிறைவு உரையை உத்தரபிரதேசத்தில் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிப்வு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 21 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிகிறது.

இதையடுத்து தேசியத் தலைவர்கள் தங்கள் நிறைவு உரையை இன்று நிகழ்த்தினர். பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதையடுத்து உத்தரபிரதேசத்தில் இன்று தனது பிரச்சார உரையை ராகுல் காந்தி நிகழ்த்தி முடித்தார்.

அவரது பேச்சில் ‘ கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக தனது பணியை சிறப்பாக செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே நமது முதல் இலக்கு. மோடியின் பிரச்சாரத்துக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் தேர்தலை திட்டமிட்டு நடத்தியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புதிய திமுகவா? அமைச்சரின் அதிர்ச்சி பேட்டி!