டெல்லியில் 50% அரசு ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அமைச்சர் கோபால் ராய் உத்தவிட்டுள்ளார்.
டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் குறைக்கும் வகையில் அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களில் 50% வீட்டிலிருந்து பணியாற்றும்படி மா நில சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களையும் வொர்க் ஃபரம் ஹொம் முறையில் பணியாற்றும்படி அறிவுறித்தியுள்ளார்.
இதனால், டெல்லியில் வாகனங்களால் அஎற்படும் காற்று மாசுபாடு மற்றும் வாகனங்களில் பயன்பாடு குறையும் என்று தெரிவித்துள்ளார்.