Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

Siva
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (07:57 IST)
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக ஒரு வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதன் விளைவாக, அவர் வேளாண்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தத்தத்ரேயே பர்னே புதிய வேளாண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கோக்டே தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து பதிலளித்த மாணிக்ராவ் கோக்டே, அது வெறும் 10 முதல் 12 விநாடிகள் மட்டுமே என்றும், அது ஒரு பாப்-அப் விளம்பரம் என்றும், அதை மூடினேனே தவிர, தான் விளையாடவில்லை என்றும் தெரிவித்தார். தனக்கு எதிராகச் சதி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
 
ஆனால், வெளியான தகவல்களின்படி, கோக்டே 18 முதல் 22 நிமிடங்கள் வரை அந்த விளையாட்டில் ஈடுபட்டது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது, அவரது விளக்கத்திற்கு முரணாக உள்ளது.
 
இந்தச் சம்பவம், சட்டமன்றத்தின் மாண்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புணர்வு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments