Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்திரபாபு நாயுடு கைதால் போராட்டம்.. ஆந்திராவில் களமிறங்கிய ராணுவம்..!

Advertiesment
சந்திரபாபு நாயுடு கைதால் போராட்டம்.. ஆந்திராவில் களமிறங்கிய ராணுவம்..!
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:24 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக ஆந்திராவில் தொடர்ந்து பதட்ட நிலை காணப்படுவதால் ராணுவம் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  
 
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதான நிலையில் அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
குறிப்பாக நடிகர் பவன் கல்யாண் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  ஆந்திர மாநிலத்தில்  அமைதி திரும்பவும் இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் காவல்துறையினர் பெருமளவு முயற்சி செய்தாலும் தற்போது  ராணுவம் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
 ராணுவம் களம் இறங்கிய நிலையில் மொத்தமாக முடங்கி இருந்த ஆந்திரா தற்போது படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஒரே இரவில் 2 பேர் படுகொலை.. கொலைகாரர்களை தேடி வரும் போலீசார்..!