முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நான் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும் இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
என்னை கைது செய்தது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறிய சந்திரபாபு நாயுடு வழக்கு திசை திருப்புகிறார்கள் என்றும் நான் எந்த ஊழலை செய்யவில்லை என்றும் சட்டப்படி இந்த வழக்கை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்
மேலும் ஊழல் புகாரில் உண்மை இல்லை என்பதால் கட்சியினர் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று கூறிய சந்திரபாபு நாயுடு முறையான தகவல் இல்லாமலே சிஐடி போலீஸ் சார் என்னை கைது செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக தெலுங்கு தேசம் கட்சி பல இடங்களில் சாலை மறியல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் குப்பம், சித்தூர் ஆகிய பகுதிகளில் தெலுங்கு தேசி கட்சியினர் சாலைகளை மறித்து டயர்களை எரித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.