Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

Advertiesment
Tapir

Prasanth Karthick

, ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (16:02 IST)

தென் அமெரிக்க நாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

உலகம் முழுவதும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிவுற்ற போதிலும், மனித வளர்ச்சிக்கு பிறகு வேட்டையாடிகளால் பல உயிரினங்கள் மொத்தமாக அழிவுற்றன. அப்படியாக உலக நாடுகளில் அழியும் நிலையில் பல விலங்குகள் உள்ளன. அப்படியாக சமீப 100 ஆண்டுகளில் உலகில் மொத்தமாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட விலங்குகளில் தென் அமெரிக்காவில் காணப்பட்ட டாபிர் இனங்களும் ஒன்று.

 

கடந்த 1914ம் ஆண்டில் இது கேமிராவில் பதிவு செய்யப்பட்ட பின்னர் அப்பகுதிகளில் தென்படவே இல்லை. பல ஆண்டுகளாக விலங்கு ஆர்வலர்கள் தேடியும் இந்த விலங்கினம் தென்படாத நிலையில் இது மொத்தமாக அழிந்து விட்டதாகவே கருதப்பட்டது. 

 

இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பாக யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இந்த விலங்கு பிரேசிலில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் காணப்பட்டுள்ளது. ஒரு தாய் டாபிர் இரண்டு குட்டிகளுடன் செல்லும் காட்சியை சிலர், வித்தியாசமான உயிரினமாக தெரிந்ததால் படம் பிடித்துள்ளனர். அதன் மூலம் டாபிர் இன்னும் அழியவில்லை என்ற செய்தி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் எவர் கண்ணுக்கும் சிக்காமல் டாபிர்கள் வாழ்ந்தது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அங்குள்ள டாபிர்களை கண்காணித்து அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..